வடக்கில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றவென வனப்பகுதிகளில் 2500 ஏக்கர் காணி பெறப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உறுதிப்படுத்த மே 16ம் திகதி சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி சுற்றாடல் அமைப்பொன்று இவ்வாறு மனு தாக்கல் செய்துள்ளது.
வில்பத்து தேசிய வனம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2388 ஏக்கர் காணி ஒதுக்கப்படவுள்ளதாக அமைப்பு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
குறித்த நிலத்தை ஒதுக்கிக் கொள்வதாக சுற்றாடல் மற்றும் சக்தி வலு அமைச்சின் செயலாளர் வட மாகாண செயலாளருக்கு கடந்த பெப்ரவரி 14ம் திகதி எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை ரீட் மனு மூலம் நிறுத்தவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக