யாழ். குப்பிளான் தெற்கு ஞானகலா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா-2015 நிகழ்வு நேற்றுமாலை (06.06.2015) முன்பள்ளியின் தலைவர் திரு. சதீஸ்குமார் அவர்களது தலைமையில் நடைபெற்றது, இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்வில் ஏழாலை சிறீமுருகன் வித்தியாசாலையின் அதிபர் திரு. சந்திரகுமார், பனை, தென்னை அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. தவராசா, கிராம சேவையாளர் மயூரதன், சமூக ஆர்வலர் அபராசுதன் ஆகியோரும் விசேட அதிதிகளாக கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்களல விளக்கேற்றல் இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக