நைஜீரிய ஆயுதக்குழுவான பொகோ கறம் (Boko Haram), 276 பாடசாலை மாணவிகளைக் கடத்தி வைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மாணவிகளில் ஒரு சிலரை விற்பனை செய்யவும், வேறு சிலரை அடிமைகளாக வைத்திருக்கவும், மிகுதிப் பேரைக் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப் போவதாகவும் அந்த இயக்கத்தின் தலைமைப் பீடம் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட மாணவிகளிற் சிலர் கமறூனிலும், றிஷாட்டிலும் கட்டாயத் திருமணம் செய்துவைக்கும் கூட்டத்தினருக்கு 12 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
53 மாணவிகள் மட்டில் தப்பியுள்ளதாகவும், மிகுதிப் பேர் இன்னமும் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளதாகவும் காவல்ப் படையினரின் தகவல் தெரிவிக்கின்றன.
https://www.youtube.com/watch?v=0wacNdROe2Q
பாதுகாப்புப் படையினர் நடாத்திய தேடுதல் வேட்டை பயனளிக்காது போனமையும், கடத்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர் வீதி ஆர்பாட்டங்கள் நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொகொ கறம் இயக்கத்தினர், வட நைஜீரியாவில் முஸ்லீம் மத அரசை அமைக்கப் போராடி வருகின்றமை நினைவு கூறப்பட்டுள்ளது.
காவற் படையினர் மேலும், நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜோநாதன் மேலும், பாதிக்கப்பட்டோர்களும், ஊர்மக்களும் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடப்பட்டுள்ளது.
வீதி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெண்களில் இருவர் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக, ஜனாதிபதியின் மனைவியால் குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக