பொத்துஹெர ரயில் விபத்து தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கை கிடைத்தவுடன்,குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளுக்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன தெரிவித்தார்.
முதலாவது குழு பொத்தஹெர பகுதிக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.
இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ரயில்வே திணைக்களத்திற்கு 168 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் 05 ஊழியர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக