செவ்வாய், 6 மே, 2014

மட்டக்களப்பில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு…!!!!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை நொச்சியாண்டான்கல் கிராமத்தில் காட்டுயானைகள் கிராமத்தில் புகுந்து கிராம வாசிகளின் பல வீடுகளையும் மக்களின் உடமைகளையும் சேதமாக்கியுள்ளன.

கடந்த சில வருடங்களாக மாவட்டத்தின் இவ்வாறான பல எல்லைப்புற கிராமங்களில் காட்டுயானைகளின் தாக்கம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

இதனால் கிராம மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாவதுடன் மிகவும்
பீதியடைந்த நிலையிலேயே தமது வாழ்வாதாரத்தினை மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு யானைகளின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான நொச்சியாண்டானகல் கிராமத்தினை சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம் மற்றும் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், கிராம மக்களுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டனர்.

இதன்போது அவர்கள் காட்டு யானைகளின் தாக்குதல் தொடர்பில் பலரும் பல வழிகளில் இதனை கட்டுப்படுத்துவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற திட்டங்களை உடன் துரிதப்படுத்துவதற்கு உரிய அரச அதிகாரிகள் ஆவண மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக