செவ்வாய், 6 மே, 2014

மலையக மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்,மீனவர்களுக்கும் எச்சரிக்கை!!!!

சீரற்ற காலநிலை காரணமாக கடும் காற்று, மண்சரிவு அபாயம் குறித்து மீனவர்களும் மலையக மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் இடி, மின்னல் மற்றும் கடுங்காற்றுடன் அடைமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக
புத்தளம் நவகத்தேகம பகுதியிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 90 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை , நேற்றைய தினமும் பதுளை, நுவரெலியா, கேகாலை, கண்டி ஆகிய நான்கு மாவட்டங் களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.மழையுடன் கூடிய காலநிலையின்போது கடலில் கடுங்காற்று வீசக்கூடும்

ஆகையினால், மீனவர்ள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் வானிலை அவதான நிலையம் மீன்பிடி திணைக்களத்திற்கூடாக தனது வேண்டுகோளை மீனவர்களிடமும் முன்வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக