செவ்வாய், 6 மே, 2014

இந்தியாவின் முக்கிய கடற்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமொன்றை இலங்கையர் முன்னெடுத்தார்....!!!!

இந்தியாவின் இரண்டு முக்கிய கடற்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமொன்றை சாகீர் ஹூசெய்ன் என்ற இலங்கையர் முன்னெடுத்து வந்ததாக தமிழக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுப் பிரிவின் சார்பில், இலங்கையின் கண்டியைச் சேர்ந்த சாசீர் ஹூசெய்ன் கடமையாற்றி வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில், தமிழக காவல்துறையினர் அண்மையில் அவரை கைது செய்திருந்தனர்.
சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்த அனுமதியளிக்குமாறு காவல்துறையினர் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மாநிலங்களான கொச்சி மற்றும் விசாக பட்டிணம் ஆகிய கடற்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமொன்றை முன்னெடுத்து வந்ததாக காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த இரண்டு கடற்படை தளங்கள் பற்றிய தகவல்களை சாகீர் ஹூசெய்ன் திரட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

துணி வர்த்தகர் என்ற போர்வையில் சாகீர் பல தடவைகள் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் மட்டும் 20 தடவைகள் சாகீர் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதேவேளை, பாகிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக