ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானுக்கு இலங்கைக்கு வர வீசா அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்க உள்ள விசாரணைக் குழுவின் தலைவராக கொபி அனான்
நியமிக்கப்பட உள்ளார்.
விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட உள்ள கொபி அனானுக்கு இலங்கைக்குள் வர கட்டாயம் வீசா அனுமதி வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கைக்குள் வந்து அவ்வாறான விசாரணைகளை நடத்த எவருக்கும் வீசா அனுமதி வழங்கப்படாது என்ற அரசாங்கத்தின் கொள்கையை கொபி அனானுக்கும் செயற்படுத்த வேண்டும் என மற்றைய தரப்பு கோரி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக