ஞாயிறு, 1 ஜூன், 2014

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐ.தே.க விற்கும் தமிழ் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சு....!!!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் கடந்த 28ம் திகதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தியாவில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதனால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக