தமிழ் மக்கள் அனைவரும் முதலில் வாக்காளர்களாக மாறவேண்டும். எனவே ஜூன் மாதம் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்படும் வாக்காளர் தினத்தில் தொடங்கி எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியல் அனைவரும் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யவேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் வடக்கு மாகாண மீன்பிடி,போக்குவரத்து,வர்த்தக வாணிப மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.
இதுகுறித்து அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் எமது மக்களில் பெரும்பாலானவர்களுக்கு வாக்குரிமை இருக்கவில்லை. ஏனெனில் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் சரியான முறையில் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை. யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது அரசியல் வாதிகளாலும், அரசியல் வாதிகளால் ஆளப்பட்ட அரச அதிகாரிகளாலும் திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டது.
இதனால் யுத்தத்துக்குப் பின்னரான ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இறுதியில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றில் தமிழ் மக்கள் பலர் வாக்களிக்க முடியாது போனது. இனிமேல் அவ்வாறான தவறுகள் இடம்பெறக் கூடாது. தமிழ் மக்கள் அனைவரும் முதலில் வாக்காளர்களாக மாறவேண்டும். எனவே ஜூன் மாதம் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்படும் வாக்காளர் தினத்தில் தொடக்கி 15 ஆம் திகதிக்கு முன்னர் அனைவரும் தமது வாக்காளர் இடாப்புக்களை பரிசீலனை செய்து பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் -என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக