பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழித்த இராணுவ வீரர்களை மறக்காத அரசாங்கம் இராணுவ வீரர்களுக்காக விசேட அன்பளிப்பினை கையளித்துள்ளது. உலகின் அதி நவீன வசதிகள் கொண்ட இராணுவ வைத்தியசாலை ஜனாதிபதியினால் இராணுவ வீரர்களிடம் கையளிக்கப்பட்டது,
133 ஆண்டுகளுக்கு முன்னர் 8 பேர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இராணுவ வைத்திய சேவை தற்போது தெற்காசியாவில் மாத்திரமன்றி முழு உலகிலும் நவீன வைத்திய சேவையினை வழங்கும் நிறுவனமாக அதி
உயரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இதனை மேலும் அர்த்தப்பூர்வமாக்கும் வகையில் 10 மாடிகளை கொண்ட சகல நவீன வசதிகளை கொண்ட இராணுவ வைத்தியசாலையினை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
6500 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்ட அதே போன்ற நிதியினை உபகரணங்களுக்காக செலவிட்டு நவீன வசதிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையினை மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.
வைத்தியசாலை வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித் ஓதுதலுக்கு மத்தியில் நினைவு படிவத்தையும் திறந்து வைத்தார். வைத்தியசாலையின் முதல் நோயாளியையும் ஜனாதிபதி பதிவு செய்தததுடன் அனைத்து பிரிவினையும் பார்வையிட்டார்.
1024 நோயாளர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க கூடிய 20 வோட் தொகுதிகளை கொண்ட இராணுவ வைத்தியசாலையில் 9 சத்திரசிகிச்சை கூடங்கள், நவீன பற்சிகிச்சை நிலையம், இருதய நோய் பிரிவு, மகப்பேற்று பிரிவு, குறைமாத சிசுபராமரிப்பு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருந்து களஞ்சியம், விரிவுரை மண்டபம் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டு அடங்கியுள்ளன. இந்த வைமத்தியசாலையில் இரு உளங்கு வானூர்திகளை நிறுத்த கூடிய வசதிகளும் காணப்படுகின்றன.
ஒரே தடவையில் 2 ஆயிரம் வெளி நோயாளர்களுக்கு சிகிச்சை பெற முடிவதுடன் எந்தவொரு நோய்க்கும் உயரிய சிகிச்சையினை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நவீன வசதிகள் ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடி மேற்பார்வையில் இராணுவ பொறியியல் சேவை பிரிவினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவ வைத்தியசாலையை திறந்து வைப்பதற்காக முதல் நாள் உரை மற்றும் ஞாபகார்த்த முத்திரையும் வெளியிடப்பட்டது. பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய தபால், அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அதிதிகள் புத்தகத்தில் கைச்சாத்திட்டார். உலகின் கொடிய பயங்கரவாதத்தை ஒழித்த அதி சிறந்த இராணுவ வீரர்களுக்கு உலகின் அதி உயரிய நலன்புரியினை வழங்கிய ஒரேயொரு தேசம் இலங்கையென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க கூறினார். உலகின் கெடிய பயங்கரவாதத்தை ஒழித்த அதி உன்னத மன வலிமை கொண்ட இராணுவ வீரர்கள் இந்த தேசத்திலே உள்ளார்கள். அதேபோன்று உலகின் அதி உயரிய நலன்புரியினை பெறும் இராணுவ வீரர்களும் எமது மண்ணிலே உள்ளனர். இதனை நான் முழு உலகிற்கும் தெரிவிக்கின்றேன்.
யுத்தத்திற்காக கணிசமான நிதியினை செலவிடும் உலகின் பலம் பொருந்திய தேசமான அமெரிக்காவில் கூட இராணுவ வீரர்களுக்கு இவ்வாறான நிவாரண சேவைகள் இல்லை. யுத்தத்தினால் ஊனமுறும் போது கவலைக்கிடமான நிலையை அடைகின்றனர். இவர்கள் பொது இடங்களுக்கு சென்று பிச்சை எடுத்தே வாழக்கூடிய நிலை காணப்படுகின்றது.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்ற வேளை எமது நாட்டில் இராணுவ வீரர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண சேவைகளை அவர்களிடம் எடுத்துரைக்கும் போது மறுபிறப்பில் இலங்கையில் தான் பிறக்க வேண்டுமென்று ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் மூத்த இராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அந்த நாடுகள் இவ்வாறு இராணுவ வீரர்களை வழி நடத்தும்போது எமது தேசம் இராணுவ வீரர்களுக்காக இந்தளவு நிவாரணங்களையும் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, சாலிந்த திசாநாயக்க, பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க, உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் , ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, உட்பட அரச உயர்மட்ட அதிகாரிகள் முப்படை தலைவர்கள் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
133 ஆண்டுகளுக்கு முன்னர் 8 பேர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இராணுவ வைத்திய சேவை தற்போது தெற்காசியாவில் மாத்திரமன்றி முழு உலகிலும் நவீன வைத்திய சேவையினை வழங்கும் நிறுவனமாக அதி
உயரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இதனை மேலும் அர்த்தப்பூர்வமாக்கும் வகையில் 10 மாடிகளை கொண்ட சகல நவீன வசதிகளை கொண்ட இராணுவ வைத்தியசாலையினை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
6500 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்ட அதே போன்ற நிதியினை உபகரணங்களுக்காக செலவிட்டு நவீன வசதிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட நாரஹேன்பிட்ட இராணுவ வைத்தியசாலையினை மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார்.
வைத்தியசாலை வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித் ஓதுதலுக்கு மத்தியில் நினைவு படிவத்தையும் திறந்து வைத்தார். வைத்தியசாலையின் முதல் நோயாளியையும் ஜனாதிபதி பதிவு செய்தததுடன் அனைத்து பிரிவினையும் பார்வையிட்டார்.
1024 நோயாளர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க கூடிய 20 வோட் தொகுதிகளை கொண்ட இராணுவ வைத்தியசாலையில் 9 சத்திரசிகிச்சை கூடங்கள், நவீன பற்சிகிச்சை நிலையம், இருதய நோய் பிரிவு, மகப்பேற்று பிரிவு, குறைமாத சிசுபராமரிப்பு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருந்து களஞ்சியம், விரிவுரை மண்டபம் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டு அடங்கியுள்ளன. இந்த வைமத்தியசாலையில் இரு உளங்கு வானூர்திகளை நிறுத்த கூடிய வசதிகளும் காணப்படுகின்றன.
ஒரே தடவையில் 2 ஆயிரம் வெளி நோயாளர்களுக்கு சிகிச்சை பெற முடிவதுடன் எந்தவொரு நோய்க்கும் உயரிய சிகிச்சையினை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நவீன வசதிகள் ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நேரடி மேற்பார்வையில் இராணுவ பொறியியல் சேவை பிரிவினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவ வைத்தியசாலையை திறந்து வைப்பதற்காக முதல் நாள் உரை மற்றும் ஞாபகார்த்த முத்திரையும் வெளியிடப்பட்டது. பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய தபால், அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி அதிதிகள் புத்தகத்தில் கைச்சாத்திட்டார். உலகின் கொடிய பயங்கரவாதத்தை ஒழித்த அதி சிறந்த இராணுவ வீரர்களுக்கு உலகின் அதி உயரிய நலன்புரியினை வழங்கிய ஒரேயொரு தேசம் இலங்கையென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க கூறினார். உலகின் கெடிய பயங்கரவாதத்தை ஒழித்த அதி உன்னத மன வலிமை கொண்ட இராணுவ வீரர்கள் இந்த தேசத்திலே உள்ளார்கள். அதேபோன்று உலகின் அதி உயரிய நலன்புரியினை பெறும் இராணுவ வீரர்களும் எமது மண்ணிலே உள்ளனர். இதனை நான் முழு உலகிற்கும் தெரிவிக்கின்றேன்.
யுத்தத்திற்காக கணிசமான நிதியினை செலவிடும் உலகின் பலம் பொருந்திய தேசமான அமெரிக்காவில் கூட இராணுவ வீரர்களுக்கு இவ்வாறான நிவாரண சேவைகள் இல்லை. யுத்தத்தினால் ஊனமுறும் போது கவலைக்கிடமான நிலையை அடைகின்றனர். இவர்கள் பொது இடங்களுக்கு சென்று பிச்சை எடுத்தே வாழக்கூடிய நிலை காணப்படுகின்றது.
அவர் மேலும் தெரிவிக்கையில், நான் சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்ற வேளை எமது நாட்டில் இராணுவ வீரர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண சேவைகளை அவர்களிடம் எடுத்துரைக்கும் போது மறுபிறப்பில் இலங்கையில் தான் பிறக்க வேண்டுமென்று ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் மூத்த இராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அந்த நாடுகள் இவ்வாறு இராணுவ வீரர்களை வழி நடத்தும்போது எமது தேசம் இராணுவ வீரர்களுக்காக இந்தளவு நிவாரணங்களையும் வழங்குவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக