வியாழன், 22 மே, 2014

ரயில் என்ஜின் சாரதிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.....!!

ரயில் என்ஜின் சாரதிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
ரயில் என்ஜின் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் நேற்று மாலை 13 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

இவற்றில் அதிகமானவை அலுவலக பணியாளர்கள் போக்குவரத்து செய்யும் ரயில்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து சகல ரயில் என்ஜின் சாரதிகளின் விடுமுறைகளும் ரத்து
செய்யப்பட்டுள்ளன.

உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், ரயில் சாரதிகள் பணிக்கு சமூகமளிக்கத் தவறினால் வைத்தியரின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் என்ஜின் சாரதிகள் மறைமுகமான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற காரணத்தினால், பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக