வியாழன், 22 மே, 2014

வடக்கு கிழக்கு இளைஞர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அறிக்கையை வெளியிடும்....!!!!!

உலகம், இளைஞர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்க வேண்டும். அவர்களின் நியாயங்களுக்கு விடை தேடித்தர வேண்டும். அத்துடன் சமவுரிமை மற்றும் சந்தர்ப்பங்களை சம அளவில் வழங்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் கருத்தாக உள்ளது
இதனை ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பேன் கீ மூனின் இளைஞர் விவகார பிரதிநிதி அஹ்மட் அல்ஹென்டாவி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அண்மையில் நடந்துமுடிந்த சர்வதேச இளைஞர் மாநாட்டில் விருந்தினராக பங்கேற்றபோதே அவர் இந்தக்கருத்தை செய்தித்தாள் ஒன்றுக்கு
தெரிவித்துள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை  இளைஞர்களுக்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையை தாம் கண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இளைஞர்களின் வேலைவாய்ப்புää சுகாதாரம்  சமாதானம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்று அஹ்மட் அல்ஹென்டாவி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்குகிழக்கு இளைஞர்களை பொறுத்தவரையில்  அங்கு ஐக்கிய நாடுகள் சபை சிறப்பாக செயற்படுகிறது.

இலங்கைக்கான பிரதிநிதி தமது சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்.

இந்தநிலையில் விரைவில் ஐக்கிய நாடுகள் சபை, வடக்கு கிழக்கு இளைஞர்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிடும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் இளைஞர் விவகார பிரதிநிதி அஹ்மட் அல்ஹென்டாவி தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக