ஞாயிறு, 18 மே, 2014

யுத்தம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதே தவிர சகோதர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல! மாத்தறையில் இடம்பெற்ற யுத்த வெற்றி விழாவில் மஹிந்த!!


"நாட்டில் இடம்பெற்ற யுத்தம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதே தவிர அது சகோதர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல" - இவ்வாறு மாத்தறையில் இன்று இடம்பெற்ற யுத்த வெற்றிவிழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையில் 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம், 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதனை இலங்கை அரசு வெற்றி விழாவாகக் கொண்டாடி வருகின்றது. ஐந்தாவது வருடமாக நடக்கும் இந்த
வெற்றி விழா இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் மாத்தறை கடற்கரையில் இடம்பெற்றது. இந்நிகழ்வை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார். இதையடுத்து 21 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு உயிரிழந்த இராணுவத்தினருக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 7,000 வீரர்கள் அடங்கிய முப்படையினரின் மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்றது. பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படையினர் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தமிழிலும் சிறிது நேரம் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து பேசுகையில் - "முப்பது வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு மனவேதனையையும் கஷ்டத்தையும் கொடுத்தது.

வெளிநாட்டில் வாழும், தீவிரவாத போக்குடைய சிலர் நாட்டில் மீண்டும் யுத்த சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்." "நாட்டின் தலைவன் மற்றும் பாதுகாலவன் என்ற வகையில் அனைத்து மக்களையும் பாதுகாப்பது எனது கடமையாகும். தவறான பிரசாரம் மூலம் நாட்டை அவமதிக்க வேண்டாம் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்." "நாட்டில் அனைத்து இனங்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது" "இலங்கை இராணுவத்தில் சிங்களவர் தமிழர் மற்றும் முஸ்லிம்கள் என மூவினத்தவர்களையும் சேர்ந்தவர்கள் பணியாற்றுகின்றனர்."- என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக