ஞாயிறு, 18 மே, 2014

சொந்தக் காணிகளை பார்க்க வளலாய் மக்களுக்கு ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கியது இராணுவம்!!

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் வளலாய் மேற்கில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் சொந்தக் காணிகளை பார்வையிட அதன் உரிமையாளர்களுக்கு இராணுவம் ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. வளலாய் மேற்கில் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியமர்வதற்கு விருப்பம் தெரிவித்த கோப்பாய் பிரதேச செயலகத்தில் பதிவு செய்த 224 பேரும் கிராம உத்தியோகத்தருடன் சென்று தமது காணிகளை பார்வையிட ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாக வளலாய் மீள்குடியேற்ற குழுவின் செயலாளாளர் எஸ்.துரைரட்ணம் தெரிவித்தார். வளலாயின் ஒவ்வொரு பகுதிகளையும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நாள்களின் அடிப்படையில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் வருமாறு:-

 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை - வளலாய் கடற்கரை, காங்கேசன்துறை வீதி இருமரங்கு, நீர்வாவிகேணி உட்பட பலாலி வீட்டுத்திட்ட கிழக்கு எல்லை வரை

21 ஆம் திகதி புதன்கிழமை - வளலாய் வடமேற்கு - தில்லங்கலட்டி, பணுவில், அரசங்கலட்டி, வேணை, கொத்தாள் பாண்டியன், மண்திட்டி ஓடை, பலாலி எல்லை வரை

 22 ஆம் திகதி வியாழக்கிழமை - வளலாய் மேற்கு கந்தாணர் வீதி, சாந்தை, கொச்சாட்டி, தாந்தபுலம், தொந்தாளை, பலாலி எல்லை வரை 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை - புளியிட்டி, ஆவரசம்புலம், ஓட்டாப்புலம், குச்சம் வரை

குறித்த பகுதிகளை மக்கள் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினத்தில் வீண் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு மீள்குடியேற்றத்திற்கு பதிவு செய்தவர்கள் உரிய ஆவணங்களுடன் காலை எட்டு மணிக்கு வருமாறு வளலாய் மீள்குடியேற்ற குழுவின் செயலாளாளர் எஸ்.துரைரட்ணம் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக