ஞாயிறு, 18 மே, 2014

தெல்லிப்பழையில் வைத்தியசாலையில் மாணவரின் சடலம் ஒப்படைப்பு!!


தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி சுன்னாகம் பொலிஸாரினால் பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மல்லாகம், கோட்டைக்காட்டை சேர்ந்த சத்தியலிங்கம் மதுசன் (வயது 14) என்பவரின் சடலமே பொலிஸாரினால் வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவருடைய மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. நாளை திங்கட்கிழமை மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் நடைபெறவுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக