காசாவுக்கான உதவிக்கப்பல் மீது கடந்த 2010 ஆம் ஆண்டு நடத்தப் பட்ட உயிர்ப்பலி கொண்ட தாக்கு தல் குறித்து இஸ்ரேல் இராணுவத் தின் நான்கு முன்னாள் கட்டளை தளபதிகளை கைதுசெய்ய துருக்கி நீதிமன்றம் ஒன்று உத்தரவிட் டுள்ளது.
இஸ்ரேல் முடக்கி வைத்திருக்கும் காசா பகுதிக்குள் கடந்த 2010 மே மாதம் மனிதாபிமான உதவிகளுடன் செல்ல முயன்ற துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தியதாக் குதலில் கப்பலில் இருந்த 9 செயற் பாட்டாளர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தளபதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்க துருக்கி அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தை கோரியிருந்தார்.
இந்நிலையில் இஸ்ரேல் இரா ணுவ அதிகாரிகளை கைதுசெய்ய சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் பிடியாணை பிறப்பிக்கப்பட வுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளானதோடு இஸ்ரேல்-துருக்கி உறவிலும் பாரிய விரிசல் ஏற்பட் டது.
இந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கேட்டபோதும், தாக்குதலை நடத்திய இஸ்ரேல் படையினர் வழக்கு விசார ணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று மனித உரிமை குழுக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக