அசாதாரணமான இதயத்துடிப்பு காரணமாக கடந்த மே 2 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட உரிபே, மரணமடைந்ததை அவர் வாழும் நுவோ லிவோன் மாநி லத்தின் சுகாதார அதிகாரிகள் நேற்று முன்தினம் உறுதிசெய்தனர்.
இதில் அவசரப் பிரிவு பணியாளர் கள் மூலம் கிரேன் கருவியை பயன் படுத்தியே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். உரிபேயின் மரணத்திற்கான காரணம் பற்றி இன்னும் உறுதி செய்யப்பட வில்லை.
உரிபே கடந்த 2006 ஆம் ஆண் டில் 560 கிலோகிராமாக இருந்ததால் உலகின் அதிக எடைகொண்ட வராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து அவர் தன் எடையை 394 கிலோகி ராமாக குறைத்துக்கொண்டார்.
மெக்சிகோவின் அமெரிக்க எல் லையில்; அமைந்திருக்கும் மொன் டெர்ரியா கிராமத்தில் வாழ்ந்துவந்த உரிபே தனது எடை காரணமாக பல ஆண்டுகளாக நடக்க முடியாமல் தவித்து வந்தார். கடந்த 2002 ஆம் ஆண்டு தொடக்கம் தனது தாய் மற்றும் நண்பர்களே அவரை சுத்தம் செய்து, உணவு வழங்கி பராமரித்து வந்தனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கிளோ டியா செலிஸ் என்பவரை திருமணம் முடித்தார். அண்மைய ஆண்டுகளில் ஒருசில தடவைகளே தனது வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
பதின்ம வயதுகளில்; 115 கிலோ வாக இருந்த தனது எடை பின்னர் படிப்படியாக அதிகரித்ததாக உரிபே குறிப்பிட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக