30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வலிமையான ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு வலுப்பெறுவதுடன் உலக அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவம் புதிய உச்சத்தை எட்டிவிடும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நி தேசாய் பிஸ்வால் வொங்டனில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கூட்டு செயல்பாட்டின் மூலம் இரண்டு நாடுகளும் பயன்பெறுவதுடன் உலக நாடுகளையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் திறன் உருவாக்கப்படுகிறது. தான் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னரே மோடி வகுத்துக் கொள்வார் என்று உறுதியாக நம்புகிறோம்.
அமேரிக்காவிற்கு அவரை வரவேற்க ஆவலுடன் இருக்கிறோம்.
பிரதமராக பதவியேற்ற பின்னர், முதல் பயணமாக ஜப்பான், சீனா அல்லது பங்கதேசுக்கு மோடி செல்வார் என்றும் முதல் பயணமாக அமெரிக்கா செல்ல மாட்டார் என்ற தகவல்களை நான் நிச்சயமாக மறுக்கிறேன். அப்படியே அவர் அந்நாடுகளுக்கு சென்றாலும் அது குறித்து கவலை ஏற்படாது. பொருளாதார வாய்ப்புகளை பெருக்கி அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைக்கும் வாய்ப்பாக இந்தத் தேர்தல் தீர்ப்பு அமைந்திருப்பதாக நம்புகிறோம் என்றார் நிதேசாய் பிஸ்வால்.
நி'h தேசாய் விரைவில் மத்திய ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் வெளிவந்துள்ள நிலையில், அவ்வாறு அவர் பயணம் மேற்கொண்டால் கண்டிப்பாக புதுடில்லி வருவார் என்றும், மோடி அரசைச் சந்திக்கும் அமெரிக்க அரசின் முதல் உயர் பிரதிநிதியாக இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக