ஞாயிறு, 25 மே, 2014

கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!


யாழ். மாவட்ட பிரதேச சபைகளின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கான ஓருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வலி. தெற்கு உடுவில் பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் நடை பெற்ற இந்தக் கலந்தரையாடலில் வலிகாமம், தீவகம், தென்மராட்சி மற்றும் கிளிநொச்சி பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும்
உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஸ்ரீதரன், வட மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், கல்வி அமைச்சர் த.குருகுலராசா, உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், பரஞ்சோதி அரியரெட்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக