செவ்வாய், 19 ஜனவரி, 2010

மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சதாசிவம் கனகரட்ணம் பிரச்சாரம்..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்ணம், ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரிக்க முன்வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களாக மல்லாவி, யோகபுரம், துணுக்காய், ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார். அங்கு கருத்துத் தெரிவித்த அவர், வன்னியில் மீளக்குடியேறியுள்ள மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்க வேண்டும். அதன்மூலம் பல அபிவிருத்திகளை ஏற்படுத்த முடியுமென கூறியுள்ளார். மல்லாவியிலும் யோகபுரத்திலும் மீளக்குடியேறிய மக்களுக்கு இரண்டு சில்லு உழவுஇயந்திரங்கள் 50, தையல் மெசின்கள் 50 வழங்கும் வைபவத்திலும் கனகரட்ணம் எம்.பி கலந்து கொண்டார். மல்லாவியில் நடைபெறவுள்ள முக்கிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனகரட்ணம் எம்.பியும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த புதன்கிழமை மாலை இவர் தடுப்புகாவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக