புதன், 28 மே, 2014

நாடு கடத்தப்பட்ட மூவரினது பாதுகாப்பு குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது..!!!!

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ள இரண்டு அகதிகள் மற்றும் அடைக்கலம் கோரிய ஒருவரின் பாதுகாப்பை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்தக் கோரிக்கையை இன்று விடுத்துள்ளது.
இவர்கள் மூவரும் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகரக பாதுகாப்பில் இருந்தவர்களாவர்.

மலேசியா 1951 ஆம் ஆண்டின் அகதிகள் உடன்படிக்கையில் பங்குதாரர் இல்லாத போதும் சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகளை அந்த நாடு மதித்து நடக்கவேண்டும்.


அடைக்கலம் பெற்றவர்களை நாடு கடத்தும் போது சுதந்திரம் உட்பட்ட அவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த மூன்று பேரும் மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டமையானது தற்போது சர்வதேசத்தின் வெளிச்சத்துக்கு உட்பட்டுள்ளது என்று கண்காணிப்பகத்தின் ஆசியநிலை உதவி பணிப்பாளர் பில் ரொபட்சன் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் குறித்த மூவரும் கிளிநொச்சியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சை கோடிட்டு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக