தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரியங்கள், கொண்டாட்டங்களை இளம் தலைமுறையினர் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இதற்க்கு பிரதேச சபைகள் வழி வகைகளைச் செய்ய முன்வரவேண்டும். இந்த வகையில் எதிர்வரும் ஆடிப் பிறப்பை பிரதேச சபைகளும் கொண்டாட முன் வர வேண்டும் என வட மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் த.குருகுலராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை வலி. தெற்கு உடுவில் பிரதேச சபையின் மண்டபத்தில் வலிகாமம், தென்மராட்சி,
கிளிநொச்சி, தீவகம் பகுதிகளைச் சேர்ந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கான ஒருங்கினைப்புக் குழுக் கூட்டம் மாவை சேனாதிராசா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தொடர்ந்து உரையாற்றும் போது வட மாகாண பாடசாலைகள் மட்டத்தில் வரும் ஆடிப் பிறப்பை சிறப்பான முறையில் கொண்டாடுவது பற்றி விரைவில் சுற்று நிருபங்கள் அனுப்பப்படவுள்ளன. இதே போன்று பொது மக்களும் கூட இந்த நிகழ்வையும் ஏனைய நிகழ்வுகளையும் நல்ல முறையில் கொண்டாடுவதன் மூலம் இளைய தலைமுறை எமது சமூக கலாசாரப் பழக்க வழக்கங்களை சிறந்த முறையில் அறிந்து கொள்ள முடியும் - என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக