செவ்வாய், 6 மே, 2014

அரசுக்கு எதிராக நாளை மின்சாரசபை ஊழியர்கள் போராட்டம்!..!!

இலங்கை மின்­சா­ர­சபை ஊழியர்கள் 11 கோரிக்­கை­களை முன்­வைத்து நாளை புதன்­கி­ழமை கொழும்­பி­லுள்ள இலங்கை மின்­சா­ர­சபை தலை­மை­ய­கத்­திற்கு முன்­பாக மாபெரும் ஆர்ப்­பாட்­ட­மொன்றை நடத்­த­வுள்­ள­தா­கவும் இதில் சகல ஊழி­யர்கள் கலந்துகொள்­ள­வுள்­ள­தா­கவும் ஏற்­பாட்­டுக்­குழு உறுப்­பினர் ரஞ்சன் ஜயலால் தெரி­வித்தார்.
அர­சாங்கம் இதற்கு செவி­சாய்க்­கா­விட்டால் நாடு முழு­வதும் தொடர் வேலைநிறுத்தப் போராட்­டங்கள் வெடிக்­கு­மென்றும் அவர் எச்­ச­ரிக்கை
விடுத்தார்.

கொழும்பு கொம்­ப­னித்­தெரு நிப்பொன் ஹோட்­டலில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற இலங்கை மின்­சார சபை இணைந்த தொழிற்­சங்க முன்­ன­ணியின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றும் ­போதே அதன் ஏற்­பாட்­டாளர் ரஞ்சன் ஜயலால் இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

2012ம் ஆண்டு நூற்­றுக்கு 45 வீதம் சம்­பள உயர்வு கோரினோம். ஆனால், அர­சாங்கம் 25 வீத உயர்வை வழங்­கி­யது. எஞ்­சிய அதி­க­ரிப்பை 1 வரு­டத்­திற்குள் வழங்­கு­வ­தாக உறுதி வழங்­கியும் இதுவரையில் எதுவும் வழங்­கப்­ப­ட­வில்லை.

அதே­போன்று சம்­பள முரண்­பா­டு­களை நீக்­கு­வ­தற்கும் எது­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதற்­காக ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டது. அது திரு­டனின் தாயா­ரிடம் சாஸ்­திரம் கேட்கும் குழு­வா­கவே அமைந்­தது. அதன் பரிந்­து­ரை­களை எமது தொழிற்­சங்­கங்கள் முழு­மை­யாக நிரா­க­ரித்­தன.

2015ம் ஆண்டில் திருத்­தப்­படும் சம்­பள உயர்­வோடு சம்­பள முரண்­பாட்­டுக்கும் தீர்வை ஏற்­ப­டுத்தி அது தொடர்­பாக தொழிற்­சங்­கங்­களும் உடன்­ப­டிக்கை செய்து கொள்­ளப்­படும் என தெரி­விக்­கப்­பட்­டது.

2015ஆம் ஆண்­டிற்கு முன்­ப­தாக எமது சம்­பள முரண்­பா­டுகள் நீக்­கப்­பட வேண்டும்.  தற்­போது தனியார் நிறு­வ­ன­மொன்­றூ­டாக 4000 பேரின் சேவை மின்­சார சபைக்கு பெற்றுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

பல வரு­டங்­க­ளாக சேவை செய்யும் இவர்­க­ளுக்கு நிரந்­தர நிய­மனம் வழங்­கப்­பட வேண்டும்.

மின்­சார சபை இன்று அர­சி­யல்­வா­தி­களின் கூடா­ர­மா­கி­விட்­டது. அனைத்­திலும் அர­சியல் தலை­யீ­டு­களை தலை­தூக்­கி­யுள்­ளன.

பத­வி­யு­யர்­வு­க­ளிலும் இதே நிலை­யேதான். இட மாற்­றங்­க­ளிலும் அர­சியல் தலை­யீ­டுகள் தலை­தூக்­கி­யுள்­ளன.

மின் உற்­பத்தி நிலை­யங்­களை அதிக உற்­பத்தி திற­னுக்­கான நிறு­வ­னங்­க­ளுக்கு ஒப்­ப­டைக்­கின்றோம் என்ற பெயரில் வெளி­நாட்டு கம்­ப­னி­க­ளுக்கு விற்­பனை செய்­வ­தற்­கான உடன்­ப­டிக்­கைகள் செய்து கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு இலங்­கையின் தேசிய மக்கள் சொத்­தான மின்­சார சபையை தனியார் கம்­ப­னி­க­ளுக்கு விற்றுத் தீர்க்கும் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. மின்­சார சபையில் தொழில் புரிந்து ஓய்வு பெற்ற ஊழி­யர்­களின் பிள்­ளை­க­ளுக்கு தொழில் வாய்ப்­பு­களை வழங்­கு­வதில் முன்­னு­ரிமை வழங்­காது.

அமைச்­சரின் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­திற்கு அதி­க­ளவில் தொழில்­வாய்ப்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இவை­ய­னைத்­தையும் எதிர்த்தே நாளை கொழும்பில் மாபெரும் போராட்­டத்தை நடத்­து­கிறோம்.

இதற்கு அர­சாங்கம் செவி­சாய்க்­கா­விட்டால் அனைத்து சங்­கங்­களும் இணைந்து கொழும்பில் மாபெரும் மாநாட்டை நடத்தி நாடு தழுவிய ரீதியில் தொடர் போராட்டங்களை நடத்தும் தீர்மானத்தை எடுக்கவுள்ளோம். பொறுமைக்கும் எல்லையுண்டு. இன்று அந்த எல்லை தாண்டிவிட்டது.

இனி எமது போராட்டங்கள் கடுமையாக இருக்கும் என்றும் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பல தொழிற்சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக