குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பதவிக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படும் சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் வரப்பிரசாதங்கள் தவிர்ந்த எதனையும்
பெற்றுக்கொண்டதில்லை.
அவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் பெற்றுக்கொண்டிருந்தால் அதனை நிரூபிக்க முடியும். லஞ்சம் பெற்றுக் கொண்டதாகவோ அல்லது வேறு சலுகைகளைப் பெற்றுக்கொண்டதாகவே நிரூபிக்கப்பட்டால் உடன் பதவி விலகத் தயார்.
இதேவேளை, மோட்டார் போக்குவரத்து குற்றச் செயல்களின் போது இலகுவாக பணம் செலுத்தக் கூடிய முறைமை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் தண்டப் பணத்தை செல்லிடப் பேசி மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபல சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக