உதயன் பத்திரிகை அலுவலகம் படையினரால் முற்றுகை!!
உதயன் பத்திரிகை அலுவலகம் இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டு, கன்னாதிட்டி சந்தி மற்றும் நாவலர்வீதிச் சந்தி என்பன மறிக்கப்பட்டு பத்திரிகை அலுவலகத்துக்குள் யாரும் செல்லமுடியாதவாறு இராணுவத்தினர் தடுத்துள்ளனர். இன்று நண்பகல் 12 மணியளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு உதயன் பணிமனை முற்றுகையிடப்பட்டு, கஸ்தூரியார் வீதியின் குறித்த பகுதியும்
பொதுமக்கள் பாவனைக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. மதியம் 1:45 மணியின் பின்னரே குறித்த வீதி மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டது. எனினும் அப்பகுதியில் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக