புதன், 28 மே, 2014

காணி சுவீகரிப்புக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்; எதிர்ப்புக்களையும் மீறித் திரண்டனர் மக்கள்!!

இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்தும் கண்டன போராட்டம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெற்றது. அச்சுறுத்தல்,அனுமதி மறுப்பு என்பவற்றையும் தாண்டி அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களும் இந்தப் போரட்டத்தில் பங்குகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், தலைவர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், சி.சிறீதரன் வடக்கு மாகாண சபை அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியினர், மீனவ ஒத்துழைப்பு இயக்கப் பிரதிநிதிகள் மக்கள் என பலர் கலந்து கொண்டனர். ''சுயநிர்ணய எரிமையை அங்கீகரி", "எமது நிலமும் எமது வீடும் எமக்கு வேண்டும்", "இராணுவமே வெளியேறு", "பரவிப்பாஞ்சான் எங்களின் தாயகம்,இராணுவமே வெளியேறு", "நில அபகரிப்பை நிறுத்து" உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கமிட்படி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக