உலக இளைஞர் மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (06) முற்பகல் 11.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை மாகம் றுகுணுபுற சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகும்.
உலக இளைஞர் மாநாட்டு ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும். ஏனைய நிகழ்வுகள் கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் வரை நடைபெறும்.
இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் மகா சபையின் தலைவர், ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவரின் இளைஞர் பிரதிநிதி, அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மாநாட்டு ஏற்பாட்டு குழு இணைத் தலைவர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ள கொழும்பு பிரகடனத்தின் விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்படவுள்ளது.
விசேடமாக இலங்கையில் ஒவ்வொரு கிராமங்களிலும் இத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.
உலகின் முன்னணி இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதன் ஊடாக இவர்களுடைய ஆலோசகைளும் அரசு மற்றும் தனியார் துறையின் லோசனைகளும் பெறப்பட்டு கொழும்பு பிரகடனம் தயாரிக்கப்பட உள்ளது.
இந்த பிரகடனத்தில் எமது எதிர்கால இளைஞர்களுக்குத் தேவையான யோசனைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக