ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

கேரதீவு – சங்குப்பிட்டிப் பாதை ஊடாக இருவாரங்களுக்குள் போக்குவரத்து ஆரம்பம்..!!

கேரதீவு – சங்குப்பிட்டி ஊடான போக்குவரத்து அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் ஆரம்பமாகும் என்று இந்தப் பாதை புனரமைப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கேரதீவுக்கும் சங்குப்பிட்டிக்கும் இடையிலான 4 கி.மீ நீள பாதையை புனரமைத்து பாலங்கள் அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. யாழ். குடநாட்டுக்கான மாற்று வழியான இந்தப் பாதையை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளன. இந்தப்பாதை நிர்மாண வேலைகள் முடிவுற்றதும் தற்காலிகமாக அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் படகுப்பாதை சேவையை ஆரம்பிக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக