ஞாயிறு, 26 செப்டம்பர், 2010
தென்னை மரத்தில் ஏற முற்பட்ட அரச ஊழியர் தவறிவிழுந்து பரிதாபகரமாக மரணம்..!
வட்டக்கச்சி, கல்மடுப் பகுதியில் தென்னை மரத்தில் ஏற முற்பட்ட அரச உத்தியோகத்தரான குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 மணிக்கு இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் திருவையாற்றைச் சேர்ந்த கிளிநொச்சி மாவட்டத் திட்டமிடல் செய லகத்தின் அபிவிருத்தி உதவியாளரான துரைசிங்கம் விஜயமனோகர் (வயது 36) என்பவரே மரணமாகி யுள்ளார்.சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:கல்மடுப் பகுதியில் நண்பரின் காணி ஒன்றில் தேங்காய் பறிக்கச்சென்ற வேளை மற்றவர்களுடன் போட்டிபோட்டு மரத்தில் ஏறியபோது குறித்த நபர் தவறிக்கீழே விழுந்துள்ளார்.இதன்போது இரண்டு கைகளும் முறி ந்ததுடன் மார்புப் பகுதியும் பலமாக அடிபட்டுள்ளது. இவர் உடனடியாகக் கிளி நொச்சி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து மேலதிக சிகிச் சைக் காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவர் நேற்று இரவு அங்கு மரணமாகியுள் ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக