அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ்தீவில் குழப்பம் விளைவித்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட 11இலங்கையர்களுக்கு விசா வழங்கமுடியாதென அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கும் மேலும் சில ஆப்கானிஸ்தானியர்களுக்குமிடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முறுகல் நிலையைத் தொடர்ந்து இலங்கையர்கள் உள்ளிட்ட மொத்தமாக 23பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் கைதானவர்கள் குழப்பத்தைத் தோற்றுவித்ததன் காரணத்தினால் அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான விசா வழங்க முடியாதென அவுஸ்திரேலியக் குடிவரவுத்துறை அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக