ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

கண்டாவளையில் இடம்பெயர்ந்த 6 ஆயிரத்து 957 குடும்பங்களில் 697 குடும்ப பெண்கள் கணவன்மாரை இழந்துள்ளனர்..!!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 6 ஆயிரத்து 957 குடும்பங்களில் 697 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது கணவன்மார்களை இழந்துள்ளதாக கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் என்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார். தாய் மற்றும் தந்தையை இழந்த 150 குடும்பங்கள் உள்ளதுடன் தாயுடன் குழந்தைகள் உள்ள 456 குடும்பங்கள் இருப்பதாகவும் 340 குடும்பங்களில் தலா ஒருவர் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாகவும் சத்தியசீலன் கூறியுள்ளார். பிரதேசத்தில் உள்ள 99வீதமான குடும்பங்களில் வீடுகள் யுத்தம் காரணமாக அழிவடைந்துள்ளன. எனினும் அவற்றில் பல குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. மீள்குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் கூரைகளுக்கு பயன்படுத்தும் பிளாதீக் கூரைகள் போதுமானதல்ல என தெரிவித்துள்ள உதவி அரச அதிபர், மழைக்காலத்தில் மக்கள் அவற்றில் வசிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக