முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண சபையில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக சட்டையில் கறுப்புப் பட்டி அணிந்துவந்த மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள், அவை முன்றிலுக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அகவணக்கம் செலுத்தினர். இதேவேளை எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இந்த வணக்க நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
அவைத் தலைவராக இருந்துகொண்டு இவ்வாறான செயற்பாடுகளில்
ஈடுபடமுடியாத சூழ்நிலை இருப்பதால் சி.வி.கே.சிவஞானம் இதில் கலந்துகொள்ளவில்லை. நிகழ்வு இடம்பெற்றபோது வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அங்கு பிரச்சன்னமாகவில்லை.
பின்னர் சபை அமர்வில் உரையாற்றும்போது தனது அஞ்சலியைச் செலுத்தினார் என்று தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக