புதன், 5 மே, 2010

அவசரகால சட்டம் 118மேலதிக வாக்குகளால் நிறைவேறியது..!!

இரண்டு நாட்கள் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான யோசனை 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அவசரகாலச் சட்ட வாக்களிப்பின்போது ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் சபையில் இருக்கவில்லை. எனினும் சிறீரங்கா, விஜயகலா சபையில் இருந்து வெளிநடப்படப்புச் செய்தபோதிலும் தொடர்ந்தும் சபையில் இருந்தவாறு யோசனைக்கு எதிராக வாக்களித்தனர். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிராக வாக்களித்தது. எவ்வாறாயினும் யோசனைக்கு ஆதரவாக 132 வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக 14 வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக