பாராளுமன்றத்தில் ஜெனரல்பொன்சேகா தொடர்பான சூடான கருத்துக்கள் முக்கிய இடத்தை பிடித்திருந்தது அவசரகாலசட்டத்தை ஒருமாதகாலத்திற்கு நீடிப்பது தொடர்பான இரண்டாவது நாள் அமர்வு இன்று இடம்பெற்றபோதே இந்த பிரச்சனை குறித்து கவனம் செலுத்தப்பட்டது இதன்போது கருத்து தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார் ஜெனரல் பொன்சேகாவிற்கு சபைக்கு வருவதற்கான அனுமதி வழங்கப்படுமா என கருத்தொன்று இடம்பெற்றபோதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் இவ்வாறான உரிமை ஒருநாளைக்கு மாத்திரம் அமுல்படுத்தப்படாது நீண்டகாலத்திற்கு அமுலில் இருக்கும் வகையில் சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா வருகை தருவதை தடுத்தமை அவரின் நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறும் செயல் என ஜனநாயக தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு செல்லவேண்டும் என அவருடைய சட்டத்தரணிகள் இராணுவ நீதிமன்றத்திற்கு அறிவிக்கவில்லை என தெரிவித்தார் இதன்போது கருத்துரைத்த எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுநீதிமன்றத்தை விட இராணுவ நீதிமன்றம் மாறானது என தெரிவித்த அவர் நாடாளுமன்றத்தி;ற்கு அது கட்டுப்படாது எனவும் சுட்டிக்காட்டினார் மேலும் நாடாளுமன்ற அதிகாரத்திற்கு அப்பால் உத்தரவு பிறப்பித்த இராணுவ அதிகாரிகள் மூவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக