வெள்ளி, 12 நவம்பர், 2010
அக்கரைப்பற்று அம்பாறை பஸ் சேவையை ஆரம்பிக்கக் கோரிக்கை..!
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளான அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூரிலிருந்து சம்மாந்துறை மற்றும் அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கு தொழிலுக்காக செல்லும் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் நலன்கருதி அக்கரைப்பற்றிலிருந்து காரைதீவு வழியாக அம்பாறைக்கு இ.போ.ச. பஸ் சேவை ஒன்றினை ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,ஆரம்பிக்கப்பட்டிருந்த இந்த பஸ்சேவை கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதனால் அம்பாறைக்கு செல்லும் அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் காரைதீவில் இறங்கி கல்முனையில் இருந்து அம்பாறைக்கு செல்லும் பஸ்ஸிலேயே ஏறவேண்டியுள்ளது. கல்முனையில் இருந்து வரும் பஸ் அதிகமான பயணிகளை ஏற்றி வருவதனால் சில வேளைகளில் காரைதீவில் நிறுத்தாமலேயே செல்கின்றது. அப்படி நிறுத்தப்பட்டாலும் கூடிய தூரம் நின்று கொண்டு பயணம் செய்ய வேண்டியுள்ளது.இதனால் பெண்கள்,வயோதிபர் மற்றும் நோயாளிகள் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு மீண்டும் அக்கரைப்பற்றிலிருந்து காரைதீவு சந்திவழியான அம்பாறை பஸ்ஸினை சேவையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக