வியாழன், 8 ஏப்ரல், 2010

பொதுத்தேர்தல் வாக்களிப்பு வீதம் (பிந்திய செய்தி)..!

வன்னி மாவட்டத்தின் 2,66,975வாக்காளர்களில் 65,416வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். இதன்படி வாக்களிப்பு வீதமானது 24.5ஆகும். இதன்படி வவுனியா தொகுதியில் 1,12,924 வாக்காளர்களில் 37,891பேர் (33.55) வாக்களித்துள்ளனர். முல்லைத்தீவு தொகுதியில் 68,729வாக்காளர்களில் 8012பேர் (11.66) வாக்களித்துள்ளனர். மன்னார் தொகுதியில் 85,322வாக்காளர்களில் 19,513பேர்(22.78) வாக்களித்துள்ளனர். இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 15,763பேரில் 8087பேர் (51.31)வாக்களித்துள்ளனர். இந்நிலையில் வன்னி மாவட்டத்தில் 20ஆயிரம் வாக்குகளைப் பெறும் கட்சிக்கு குறைந்தபட்சம் 03ஆசனங்களாவது கிடைக்கும் சாத்தியமே காணப்படுகிறது. இந்த ஆசனங்கள் புளொட் அமைப்புக்கா?, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கா? என்பது தெரியாதநிலை உள்ளது. ஆயினும் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் குறிப்பாக முல்லைத்தீவு மக்கள் மத்தியில் தீவிர தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த புளொட் அமைப்பினருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின் நிமித்தம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினரால் அப்பகுதி வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லும் போது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் அவர்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் நோக்கில் வாக்களிப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப் பட்டதென்பதை தேர்தல் ஆணையாளரின் உதவியதிகாரி சுட்டிக் காட்டியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எது எவ்வாறாயினும் இன்னும் சிறிது நேரத்தில் வன்னித் தேர்தலின் சரியான முடிவுகள் தெரிய வரும். இது இவ்விதமிருக்க யாழ்ப்பாணத்தில் 18முதல் 20வீதமும், திருமலையில் 58வீதமும், மட்டக்களப்பில் 56வீதமும், அம்பாறையில் 60வீதமும் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக