புதன், 28 ஏப்ரல், 2010

கொழும்பில் பணிகளை ஆரம்பித்தார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ..!!

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எமது கடமைகளை ஆரம்பித்தார். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் வைத்து தமது பணிகளை ஆரம்பித்தார். அதன் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தான் பொறுப்பேற்றுள்ள அமைச்சின் மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உயர் பங்களிப்பை வழங்குவதுடன் 10ஆயிரம் புதிதொழில் வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதேவேளை புனர்வாழ்வு முகாம்களில் உள்ள வடமாகாணத்தை சேர்ந்த 11ஆயிரம் வடமாகாண இளைஞர் யுவதிகளின் விடுதலையின் பின்னர் அவர்களுக்கான கைத்தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து தாம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக