
அரசாங்க அமைச்சர்களில் அடிதடிக்கு பெயர்போன மேர்வின் சில்வாவுக்கு ஊடகத்தறையின் பிரதிஅமைச்சு பதவி வழங்கப்பட்டமைக்கு பல ஊடக கண்காணிப்பு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அவரோ ஊடகவியலாளர்களின் ஒழுக்கமே தமக்கு முக்கியம் என தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் விருத்திக்கு ஒழுக்கம் என்பது உயிர்நாடி அனைத்து ஊடகவியலாளர்களும் ஒழுக்கத்தை பேண வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அடிதடிக்கு என்றே தனிக்குழு அமைத்து வைத்திருந்து பல்வேறு ஊடகவியலாளர்களையும் தாக்கியுள்ள மேர்வி;ன் சில்வாவின் இவ்வறிக்கையை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று தெரியாத நிலையில் ஊடக கண்காணிப்பு அமைப்புகள் அதிர்ச்சியடைந்துள்ளன. மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை ஊடகத்துறை பிரதி அமைச்சராக நியமித்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர் ஊடகவியலாளர்களே தனது தலைவர்கள் என்றும் இனி ஊடகவியலாளர்களது பாதுகாப்பை மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரது பாதுகாப்பையும் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக