வியாழன், 29 ஏப்ரல், 2010

சார்க் நாடுகளுக்கிடையே கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும் - ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ வேண்டுகோள்...!!

சார்க் நாடுகளுக்கு இடையே நாடாளுமன்ற கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டுமென ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார் சார்க்நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி உலக அரங்கில் ஒரேகுரலாக ஒலிக்கவேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் சார்க் அமைப்பின் புதிய தலைமை பொறுப்பை பூட்டானுக்கு வழங்கி வைத்து உரையாற்றியபோதே சார்க் அமைப்பின் முன்னாள் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில் சார்க் நாடுகளில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு அனைத்து சார்க் நாடுகளும் ஒன்றிணைந்து ஒருமித்து செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் மூன்று தசாப்தகாலமாக நீடித்த பயங்கரவாதத்தை இலங்கை முற்றாக இல்லாதொழித்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் கிராமங்களை அபிவிருத்தி செய்தகாரணத்தினால் தமது கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக