செவ்வாய், 27 ஏப்ரல், 2010

காவல்துறை உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும் -பாதுகாப்புச் செயலாளர்..!

காவல்துறை உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மீது நம்பிக்கை கொள்ளும் வகையில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலி பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் நன்மதிப்பை பெற்றுக் கொள்வதற்கான முனைப்புகளில் காவல்துறையினர் அதிக கரிசனை காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். கட்டானை காவல்துறை அக்கடமியில் இடம்பெற்ற விஷேட கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை மா அதிபர் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த மாற்றங்களுக்கு கூடுதல் அக்கறை காட்ட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளதல் மற்றும் விசாரணைகளை காலம் தாழ்த்துதல் போன்ற நடவடிக்கைகளினால் மக்கள் காவல்துறையினர் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகள் மற்றும் குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஒப்புக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக