செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக எமது ஜனாதிபதிக்கு பூட்டான் பாராட்டு..!

இலங்கையில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பூட்டான் ஜனாதிபதி ஜிக்மி திமிலேவ் பாராட்டு தெரிவித்தள்ளார். பதினாறாவது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக நேற்று பூட்டான் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பூட்டான் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சினேகபூர்வ பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதிக்கு இந்த பாராட்டு கிடைத்தது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை காரணமாக சார்க் வலய நாடுகளில் அமைதியும் சமாதானமும் நிலவ வழியேற்பட்டுள்ளதென்றும் பூட்டான் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் அண்மையில் இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தலின் போது அரசு பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளமை குறித்தும் இத்தேர்தலில் ஜனாதிபதியின் மகன் அரசியல் பிரவேசம் ஆரம்பமாகியுள்ளமை குறித்தும் பூட்டான் ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்;தை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இணைப்புச் செயலாளர் சஜித் வாஸ் குணவர்தன சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக