வெள்ளி, 9 ஏப்ரல், 2010

வன்னித் தேர்தல் தொடர்பில் புளொட் வேட்பாளர் பவன்!

வன்னித் தேர்தல் குறித்து வன்னியில் நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளரான புளொட் மத்தியகுழு உறுப்பினரும் புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளருமான க.சிவநேசன் (பவன்) அவர்களிடம் இணையதளம் தொடர்புகொண்டு கேட்டபோது, இத் தேர்தலானது நூற்றுக்கு நூறுவீதம் ஜனநாயக ரீதியில் நடைபெற்றதென்று கூறமுடியாத அதேவேளை பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லையென்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இதேவேளை இத்தேர்தலானது யுத்தத்தில் தொடர்புபட்டவர்கள் யுத்தத்தில் தொடர்புபடாதவர்கள் என இரு பகுதியினரினாலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளின்மூலம் அம்மக்களின் தீர்மானம் என்னவென்பதை அறிந்துகொள்ள முடியும். ஏனெனில் எம்மால் மன்னார் மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் மக்களின் முடிவுகள் தொடர்பில் தற்போது எதனையும் உறுதியாகக் கூறிவிட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆயினும் இத்தேர்தலில் எமது தரப்புக்கும் சாதகமான சூழ்நிலை காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக