வியாழன், 8 ஏப்ரல், 2010

தேர்தல் வாக்களிப்பு வீதம் (பகுதி-2)

இம்முறை பொதுத் தேர்தலில் அதிகூடிய வாக்காளர்களைக் கொண்ட கொழும்பு மாவட்டத்தில் மிகக்குறைந்த வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். இந்த வகையில் 50 முதல் 52சதவீத வாக்குகளே கொழும்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தில் 60வீதமும், மாத்தளையில் 55வீதமும், புத்தளத்தில் 60வீதமும், களுத்துறையில் 51வீதமும், கம்பஹாவில் 55முதல் 60வீதமும், மாத்தறையில் 50வீதமும், நுவரெலியாவில் 55முதல் 60வீதமும் வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளன. நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதத்தை இறுதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வெளியிட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்க அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பில் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் இன்றிரவு 10மணிமுதல் வெளியிடப்படுமென்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தொகுதி வாரியான முடிவுகளானது நள்ளிரவுக்குப் பின்னர் வெளியிடப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையதினம் பிற்பகல் கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் தொடர்பிலான விபரங்கள் வெளியிடப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் நோக்கும்போது 50சதவீத வாக்குப்பதிவுகளே இன்று இடம்பெற்றுள்ன. கடந்த காலங்களைவிட பொதுத் தேர்தல் வாக்குப்பதிவானது இம்முறை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது 74.49சதவீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் 50வீதம் முதல் 52வீதம் வரை வாக்குப்பதிவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்குரிய இலங்கைப்படகு தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தமிழக பொலீசார் தெரிவிக்கின்றனர். இலங்கைப் படகொன்று கரையொதுங்கி தமிழகம் இராமேஸ்வரம் சேரன்கோட்டையில் கரையொதுங்கியது. இப்படகில் நால்வர் பயணித்திருக்கலாமெனவும் கரையொதுங்கியதற்கான காரணம் கண்டறியப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக