சனி, 6 மார்ச், 2010
இலங்கை அரசின் அனுசரணையில் பிரபாகரனின் தாய் வெளிநாடு சென்றார்..!
பிரபாகரனின் தாயார் பார்வதி இன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து வெளிநாடு ஒன்றுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இன்று வெளியேறியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் நெருங்கிய நேசத்திற்குரியவரான சிவாஜிலிகங்கம் ஏற்பாடுகளை செய்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றது. பிரபாகரனின் தகப்பன் வேலுப்பிள்ளை உயிரிழந்தபோது அவ்விடத்தினை வைத்து சிவாஜிலிங்கம் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு பிரபாகரனின் சகோதரிகள் அனுமதி வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாககும். கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு பம்பலப்பிட்டி வெஸ்டன் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த இவர் எந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. அவரின் பிள்ளைகள் இந்தியா, டென்மார்க் மற்றும் கனடாவில் வசிப்பதால் இந்த மூன்றில் ஒரு நாட்டிற்கு சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக