ஞாயிறு, 7 மார்ச், 2010

சரத் பொன்சேகாவின் ஜனநாயக தேசிய கூட்டமைப்பு வவுனியாவில் வேட்பாளர்களுடன் சந்திப்பு..!

வடக்கு கிழக்கு மாவட்டங்களில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று வவுனியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஜேபிவி தலைவர் சோமவன்ச அமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். வடக்கில் வசந்தம் கிழக்கில் உதயம் என சொல்லப்பட்டாலும் மக்கள் வாழ்க்கையில் அபிவிருத்தி காணப்படவில்லை என குறிப்பிட்ட சந்திரசேகரன், வடகிழக்கில் கடந்த 30வருட போரினால் பாதிக்கப்பட்ட மக்கள்pன் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தபட வேண்டும் என கூறியதுடன் ஜனநாயக சூழல் வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் சரத் பொன்சேகாவிற்கே வாக்களித்துள்ளனர். ஆனாலும் வெற்றியானது மோசடி முறையில் அரசு தனதாக்கிக் கொண்டது. இதனால் மக்களுடைய வெறுப்பை பெற்றுள்ளனர். இந்நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவற்காக குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுத் தேர்தலில் அனைத்து மக்களும் எதிரணியை பலப்படுத்தவேண்டும். அதேநேரத்தில் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயக தேசியகூட்டமைப்பிற்கு ஆதரவளிக்க வேண்டும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக