ஞாயிறு, 14 மார்ச், 2010

2010ல் போய் பார்க்க வேண்டிய 31இடங்களில் இலங்கை முதலிடம்..!

தற்போது ஏற்பட்டுள்ள அமைதி சூழ்நிலை காரணமாக இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வரவேற்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரசபை தெரிவித்திருக்கின்றது. இவ்வருடத்தின் கடந்த பெப்ரவரி மாதத்தில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 67.7வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி 57,300 பயணிகள் இலங்கை வந்துள்ளதாக அதிகாரசபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த எண்ணிக்கையைக் கடந்த 2009ம் ஆண்டு பெப்ரவரியுடன் ஒப்பிடும்போது, அந்த மாதத்தில் 34,169 சுற்றுலாப் பயணிகளே வருகை தந்துள்ளனர். மேற்கு ஐரோப்பா, தெற்காசியா, கிழக்காசியா, மத்தியகிழக்கு மற்றும் வடஅமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தே அநேகர் இலங்கைக்குக் கடந்த மாதம் வந்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து கடந்த வருடம் மே மாதம் முதல் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. 2010ல் போய் பார்க்க வேண்டிய 31இடங்களில் இலங்கை முதலிடம் வகிப்பதாக அண்மையில் நியூயோர்க் டைம்ஸ் சஞ்சிகை தரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்துக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக