ஞாயிறு, 14 மார்ச், 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்படும் தினமன்று எதிர்ப்பு நடவடிக்கைக்கு அழைப்பு..!

ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்படும் தினமன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 16ம்திகதி ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு எதிரான விசாரணைகளின்போது சகல நகரங்களிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். போதி பூஜைகள் மற்றும் ஏனைய சமய அனுஷ்டானங்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுதுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக