சனி, 6 பிப்ரவரி, 2010

ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு பக்கச்சார்பானது -இலங்கை அரசு தெரிவிப்பு

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஆடைஏற்றுமதி கோட்டாவை ரத்துச்செய்ய எடுத்த தீர்மானமானது ஒரு பக்கசார்பானது அவ்வாறு மேற்கொள்வது நடைமுறையில் ஏற்றுக் கொள்ள முடியாதது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம், லக்சம்பேக் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான இலங்கை தூதுவர் ரவீநாத ஆரியசிங்க இதுதொடர்பில் கருத்துரைக்கையில் இலங்கைக்கான ஆடை கோட்டா ஏற்றுமதி சலுகையை நிறுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வ முடிவு எதனையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைமீறல்கள் மற்றும் அதுதொடர்பான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்ற அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இந்த சலுகையை ரத்துச்செய்யும் தீர்மானத்தை அறிவித்துள்ளது இதுதொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக