ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

பொதுத்தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் கூட்டணி அமைப்பதில் சர்ச்சை

இலங்கையில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான எதிர்கட்சி கூட்டணி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஜனாதிபதி தேர்தலைப்போன்று பொதுத்தேர்தலிலும் அன்னம் சின்னத்தி;ல் ஜெனரல் சரத்பொன்சேகாவின் தலைமையில் போட்டியிட ஜே.வி.பியினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனினும் ஐக்கிய தேசியக்கட்சி இதற்கு உடன்பட மறுத்துவருகிறது ஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையில் அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுவதை விரும்புகின்றனர். இதனை ரணில் விக்கிரமசிங்க ஜே.வி.பிக்கு அறிவித்துள்ளார் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போது ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்திற்கு ஏதாவது ஒருமுறையில் தீர்வுகாணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார.; இந்தநிலையில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்டால் அதன்மூலம் ஜே.வி.பிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடயத்தில் வாய்;ப்புகள் அதிகரிக்கும் ஆனால் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாமல் போகலாம் என எதிர்வு கூறப்படுகிறது 2004ம்ஆண்டு ஜே.வி.பியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் செய்துக் கொண்ட உடன்படிக்கையின் விளைவு இதுவே என ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக